கடல் புறா – முதல் பாகம் (Tamil Edition)


Price: [price_with_discount]
(as of [price_update_date] – Details)


[ad_1]

அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், “தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்” என்று கூறி சுங்க அதிகாரியைக் கூர்ந்து நோக்கினான்.
சுங்க அதிகாரியின் விழிகளில் கோபமே அதிகரித்தது. “விலையைச் சொல்லவில்லை. வேறு மதிப்பைச் சொன்னேன்” என்றான் சுங்க அதிகாரி கோபம் குரலில் உஷ்ணத் துடன் ஒலிக்க.
“வேறு எந்த மதிப்பைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று மீண்டும் வினவினான் இளைஞன்.
“இதைச் சிலர்தான் அணிய முடியும்” என்று சுட்டிக் காட்டினான் சுங்க அதிகாரி.
“ஆம்.”
“இது பல்லவ ராஜ சின்னம்.”
“அதனாலென்ன?”
“இதைப் பல்லவ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அணியலாம்.”
“அதையும் நானறிவேன்.”
இதைக் கேட்டதும் சுங்க அதிகாரியின் முகத்தில் ஈயாடவில்லை. “அப்படியானால் தாங்க…?” என்று திணறினான்.
“கருணாகர பல்லவன்.” ஏதோ ஒரு சாதாரண விஷயத்தை அறிவிப்பவன்போல் தன் பெயரை அறிவித்தான் அந்த இளைஞன்.
சுங்க அதிகாரிக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த தைரியமும் போய்விட்டது. அவன் இதயத்தில் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகள் மோதின. “இளைய பல்லவரா?” என்று மிதமிஞ்சிய வியப்பும் திகைப்பும் கலந்த குரலில் வினவினான் சுங்க அதிகாரி.
‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டிய கருணாகர பல்லவன், “இனி நான் போகலாமல்லவா?” என்று வினவிக்கொண்டே மெல்லத் திரும்பினான்.
“நில்லுங்கள்” என்ற அதிகாரியின் குரலைக் கேட்டுத் திரும்பிய இளைய பல்லவனை அருகில் இழுத்த அதிகாரி, “நீங்கள் போக வேண்டிய இடம் எது?” என்று பயத்துடன் வினவினான்.
“கோடிக்கரை கூலவாணிகன் மாளிகை.”
“அது நகரத்துக்குள் அல்லவா இருக்கிறது?”
“ஆம்.”
“அப்படியானால் இப்பொழுது போக வேண்டாம். அடுத்தாற்போலுள்ள என் இல்லத்தில் தங்கியிருங்கள். நள்ளிரவுக்குப் பின் போகலாம்” என்று மன்றாடினான் சுங்க அதிகாரி.
“இப்பொழுது ஏன் போகக் கூடாது?” என்று சற்று நிதானத்தை இழந்து கேட்டுவிட்டு மீண்டும் போகத் துவங்கிய கருணாகர பல்லவன் கையைப் பிடித்து நிறுத்திய சுங்க அதிகாரி கலவரத்துடன் சொன்னான்: “பிடிவாதம் வேண்டாம். சொல்வதைக் கேளுங்கள். ஊருக்குள் சென்றால் நீங்கள் உயிருடன் மீள முடியாது” என்று.
கருணாகர பல்லவன் விழிகளில் வியப்பு மலர்ந்தது. ஆனால் காரணத்தை அதிகாரி மெள்ள மெள்ள விவரிக்கத் தொடங்கியவுடன் அந்த வியப்பு கோபமாக மாறத் தொடங்கவே, தான் இருக்குமிடம் கலிங்கத்தின் சுங்கச் சாவடியென்பதையும், சுற்றுமுற்றும் வீரர்கள் நடமாட்டம் இருக்கிறது என்பதையுங்கூட கவனிக்காமல், “அத்தனைத் துணிவா இந்தக் கலிங்க பீமனுக்கு?” என்று ஆத்திரத்தால் சற்று இரைந்தும் கூவிவிட்டான் கருணாகர பல்லவன். அந்தக் கூச்சல் அதிகாரியின் காதில் மட்டும் விழுந்திருந்தால் இந்தக் கதையின் போக்கும், கருணாகர பல்லவன் வாழ்க்கையின் போக்கும் வேறு திசையில் திரும்பியிருக்கும். ஆனால் விதி யாரை விட்டது? அவன் கூவியது சற்று தூரத்தேயிருந்த இரு வீரர்களின் காதிலும் விழுந்தது. உடனே நிகழ்ந்தது பிரளயம்.

ASIN ‏ : ‎ B0BLT4WKVF
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 898 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 396 pages

[ad_2]

Leave a comment